Job Opportunities
வேலை வாய்ப்புகள்
இன்று மென் பொருள் துறையில் நமது வகுப்பில் சேர்ந்து படிப்பவர்களுக்கு வேலை வாய்ப்புகள் ஏராளமாக உள்ளன.
தமிழ் சமூகத்தில் Data Science தொழில்நுட்பம் தெரிந்த வல்லுநர்களை உருவொக்கும் முயற்சியில், இந்தியா (முக்கியமாக தமிழ் நாடு மாநிலம்) , அமெரிக்கா, இலங்கை , ஆஸ்திரேலியா, ஜெர்மெனி மற்றும் கனடாவில் மென்பொருள் துறையில் பணியாற்றும் தமிழர்களை கொண்டு
Data Science in Tamils என்ற அமைப்பை உருவாக்கி, அதன் மூலம் Data Science (Artificial intelligence, Machine Learning and Deep Learning) போன்ற வளர்ந்து வரும் நவீன தொழில்நுட்பம் சேவை மனப்பான்மையுடன் கட்டணமில்லாமல் கற்று கொடுக்க படுகிறது.
இன்று மென் பொருள் துறையில் நமது வகுப்பில் சேர்ந்து படிப்பவர்களுக்கு வேலை வாய்ப்புகள் ஏராளமாக உள்ளன.
இன்றைய காலகட்டத்தில் மருத்துவம், வானியல் ஆராய்ச்சி , தொழில் நுட்பம் மற்றும் அனைத்து துறைகளிலும் முக்கிய முடிவுகளை மேற்கொள்ள Data Science - ன் பங்களிப்பு மிக இன்றியமையாத ஒன்றாகும்.
Data Science (Artificial intelligence, Machine Learning and Deep Learning) தொடர்பான வருங்கால ரெகுலர் மற்றும் சிறப்பு வகுப்புகள் .
கடந்த 45 நாட்களாக நடந்த Python வகுப்பு முடிந்து விட்டதால் இன்று வகுப்பு கிடையாது. Python Certification பற்றிய Discussions ஓரிரு நாட்களில் துவங்கும்.
புதிதாக சேரும் மாணவர்களுக்காகவும், சில பாடங்கள் புரியாதவர்களுக்காகவும் Mentors மூலமாக வகுப்புகள் நடத்த படும்.
எவ்வாறு Computer Science, Mathematics மற்றும் Statistics இணைந்து Data Science ஆக மாறி தொழில் துறைகளுக்கு தீர்வுகளை வழங்குகிறது? என்பது பற்றி திரு. டாக்டர். C.முத்து, Ph.D அவர்கள் (HOD, Loyala College, Chennai ) ஜூலை 21, இந்தியா இலங்கை நேரம் இரவு 9 மணி முதல் 10.30 வரை சிறப்பு வகுப்பு நடத்துகிறார்கள்.
ஜூலை 31, இந்தியா இலங்கை நேரம் இரவு 9 மணி முதல் 10.30 வரை திரு. முரளிதரன் அவர்கள் GitHub Copilot வகுப்பு நடத்துகிறார்கள்.
Data Science (Artificial intelligence, Machine Learning and Deep Learning) தொடர்பான வருங்கால சிறப்பு நிகழ்வுகள். தேதி மற்றும் நேரம் பின்னர் அறிவிக்கப்படும்.
பேராசிரியர் டாக்டர்.சிவ ரஞ்சனி Ph.D அவர்கள் Data Science துறையில் Statistics குறித்து வகுப்பு நடத்துகிறார்கள்.
திரு. நாதன் அவர்கள் Real-time Project க்கு பயன்படும் Database ஆன MongoDB வகுப்பு நடத்துகிறார்கள்.
வகுப்பு நேரங்களில் ஆன்லைன் வகுப்பில் சேர.
பாடம் சம்பந்தப்பட்ட அனைத்து Study materials மற்றும் உங்கள் சந்தேகங்களையும் நிவர்த்தி செய்ய Google Classroom - ல் இணையுங்கள்.
வகுப்பு சம்பந்தப்பட்ட அனைத்து சந்தேகங்களையும் நிவர்த்தி செய்ய Telegram Group - டன் இணையுங்கள்.
தமிழ் சமூகத்தினரை Data Science துறையில் வல்லுனர்களாக உருவாக்குவதன் பொருட்டு எல்லா முயற்சிகளையும் மேற்கொள்ளுகிறோம்.
Data Science சம்பந்தப்பட்ட International Level Certificate பெறுவது குறித்த ஆலோசனைகள் வழங்கப்படும்.
மாணவர்களை சிறந்த தகுதி உள்ளவர்களாக ஆக்குவதற்கு Realtime Live Projects மூலமாக பயிற்சி வழங்கப்படும் .
புதிதாக வகுப்பில் சேர விரும்பும் மாணவர்கள் உங்கள் மனதில் எழும் சந்தேகங்களை தீர்த்து கொள்ள பின்வரும் விபரங்களை பார்க்க.
அனைவரும் வருக. ஆனால் நாங்கள் வகுப்பு தமிழில் தான் பயிற்றுவிக்கிறோம் . தமிழ் புரிந்தால் யார் வேண்டுமானாலும் சேரலாம். தமிழ் தெரிந்த உங்கள் நண்பர்களையும் அழைத்து வாருங்கள்.
தினமும் இந்தியா, இலங்கை நேரப்படி இரவு 9 மணி முதல் 10.30 மணி வரை. ஞாயிற்று கிழமைகளில் வகுப்பு கிடையாது . தொழில் துறை வல்லுநர்களை அழைத்து அவர்கள் சம்பந்தப்பட்ட துறையில் Data Science (Artificial intelligence, Machine Learning and Deep Learning) எப்படி பயன்படுத்த படுகிறது என்று Special Seminar நடத்தப்படும.
Data Science (Artificial intelligence, Machine Learning and Deep Learning) க்கு தேவையான
1. Python (Version 3.9)
2. NumPy (Numerical Python) (Version 1.20.3)
3. Pandas (Version 1.2.4)
4. Matplotlib (Version 3.4.2)
5. Seaborn (Version 0.11.1)
6. SciPy (Version 1.6.3)
7. Scikit-learn (Version 0.24.2)
8. TensorFlow (Version 2.5.0)
9. Statistics for Data Science
10. Business Mathematics for Data Science
கற்று தரப்படும்.
வேலை வாய்ப்பு கிடைக்கும் வசதியை கூட்டுவதற்காக Django, MongoDB/PostgreSQL ம் கற்று தரப்படும்.
Data Science (Artificial intelligence, Machine Learning and Deep Learning) என்பது வளர்ந்து வரும் அதி முக்கிய தொழில்நுட்பம். நாங்கள் கற்றதை நம்முடைய தமிழ் சமூகத்துக்கு, முக்கியமாக இளைய தலைமுறைக்கு கொண்டு சேர்க்க வேண்டும் , தமிழர்கள் அனைவருக்கும் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதால் கட்டணம் இல்லை. ஒருவருக்கு ஒருவர் உதவுவதே எங்கள் நோக்கம். வாருங்கள் பயன் பெறுங்கள். மற்றவர்களுக்கும் இதே போல் உதவுங்கள் . தமிழ் தெரிந்த உங்கள் நண்பர்களையும் அழைத்து வாருங்கள்.
நாங்கள் Certificate தருவது இல்லை. Data Science சம்பந்தப்பட்ட Microsoft Certificate / IBM certificate / Google Certificate எப்படி எழுதலாம் என்று ஆலோசனை தருகிறோம். அதை முறையாக படித்து Pass பண்ணுவதற்கு தேவையான வகையில் வகுப்பு மற்றும் material இருக்கும். Interview க்கு உதவும். Hands on பயிற்சியும் கிடைக்கும்.
மே 29, 2021 முதல் இந்த வகுப்பு நடக்கிறது.
இப்போது Python (Version 3.9) தொழில் நுட்ப வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றது
ஆகஸ்ட் 31st, 2021 முதல் fresh batch ஆரம்பிக்கிறோம்.
நாங்கள் recording செய்வது இல்லை. ஒரு வார்த்தை விடாமல் class materials உருவாக்கி அவற்றை google class room ல் போட்டுள்ளோம்
தங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் info@datascienceintamil.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். .